Review of ம. நவீனின் "போயாக்" சிறுகதை

எங்கள் "Bay Area விஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்தில்" கடந்த மாதம் சிறப்பு விருந்தினராக மலேசிய அழுத்தாளர் திரு ம. நவீன் வந்திருந்தார். மிகவும் சிறப்பான உரையாடலிற்கு பின், நாம் அவருடைய இரு சிறுகதைகளை ஒன்றாக சேர்ந்து அலசினோம், ஆராய்ந்தோம் . முக்கியமாக, நவீன் அவர்கள், அந்த கதையை பற்றி பேச போவதில்லை என்று தெளிவாக இருந்தார்.

"போயாக்" கதையில் வரும் நாயகன் மலேசியாவில் பெரு நகரத்தில் படித்து, ஆங்கிலத்திலும் பொருளாதாரத்திலும் பின்தங்கியுள்ள "சரவாக்" (Saravak) மாநிலத்தில் தயக்கத்துடன், வெண்டாவிருப்பாக செல்கிறான். முதலைகள், மனிதர்கள், உடை, உணவு என "சரவாக்"  வேறு உலகமாகவே உள்ளது. அங்கு நடக்கும் நிகழ்வுகள், விவரிப்பு என் கற்பனையில் உருவாகி வளர தொடங்கியது.

இவன் அவர்களின் வாழ்வு முறையின் தெளிவை கண்டு நாயகன் வியக்கிறான். பல்லாயிரம் ஆண்டுகளாக மனிதரும் முதலைகளுக்கும் இடையே உள்ள எல்லையை நன்கு புரிந்து வைத்துள்ளார்கள், வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். இந்த எல்லையை மீறினால் உயிர்க்கு உத்தரவாதம் இல்லை. இதை பார்த்த நம் கதாநாயகன் நடுங்குகிறான். விட்டால் ஓடிவிடுவான் போல.

இந்த முதல் காட்சியிலேயே பள்ளிக்கூடத்தில் இரு முதலைகள் மழையில் ஒதுங்கியிருந்தது. அதில் ஒன்றை ஆற்றில் அடித்து துரத்துகிறார்கள். மற்றௌன்றை மல்லாகப் திருப்பி... நம் நாயகன் அதன் மென்மையான வயிறு மெத்தைபோல இருப்பதை ரசிக்கும்போது, ஒருவன் கோடாலியால் வயிற்றை கிழித்து கொள்கிறான். நம் நாயகணால் அதை பார்க முடியாமல் திரும்பிக்கொள்கிறான். 

சரவாக் மக்கள், முதலைகளை ("போயாக்") இரையாக்குகின்றனர், அதேபோல் மனிதர்கள் ஆற்றுக்கும் சென்றால் முதலைகள் அவர்களை உண்பது ஒரு எல்லை தர்மமாக ஏற்றுக்கொண்டுள்ளனர். இதில் முதலைகளும் மனிதர்களும் ஒருவருக்கொருவர் சமமாகக் கருதுவது இக்கதையின் கரு. இது உண்மையும் கூட. இந்த வாழ்வியல் உலகில் எங்கும் காணபடுவதில்லை. மனிதன் தன்னை மட்டுமே இப்புவியின் நாயகனாக, சொந்தக்காரனாக கருதுகிறான். 

பிறகு அவனுக்கு சாப்பிட சுவையான உணவு கொடுக்கிறார்கள். ரசித்து உண்டபின் அதுதான் முதலை இறைச்சி என்று தெரிந்ததுடன் வாந்தி எடுக்கிறான். இவ்வாறு நடக்கும் அனுபவத்தால் முதலில் நாகரீகம் இல்லா பயங்கர சமூகம் போல தெரிகிறது. ஆனால் அதில் உள்ள தெளிவு கொஞ்சம் கொஞ்சமாக புரிகிறது. அவரகள் தட்டு தடுமாறும், நிலை குலைந்து போன சமூகம் இல்ல. இயற்கையுடன் ஆரோக்யமாக, நிலையான சமநிலையில் (stable equilibrium) வாழ்கிறார்கள்.

இந்த சூழ்நிலையில், அவனுக்கு மெல்ல மெல்ல அந்த சமூகத்தில் உள்ள அழகை ரசிக்க துவங்கிகிறான். சீமா எனும் அழகிய பெண்ணையும் சந்திகிறான். அவளின் அழகும்,  தைரியமான அணுகுமுறையும் அவனை ஈர்கிறது. ஆனால், அவளின் தந்தை காட்டில் திரியும் ஒரு சக்திவாய்ந்த மந்திரவாதி எனவும், பெண்களிடம் தவறாக நடக்கும் ஆண்களுக்கு என சிறப்பான ஒரு மந்திரம் வைத்திருப்பதாகவும் தெரிந்தவுடன் அலறுகிறான். சீமாவின் அழகை தொலைவில் இருந்து ரசித்ததை நினைத்து, அந்த மந்திரம் வேலை செய்வது போல கனவு காண்கிறான். நடுங்குகிறான். 

இறுதியில் தன் தந்தை உடல் நிலை குறித்து செய்தி வந்ததால், அடுத்த நாளே புறப்பட ஏற்பாடு செய்கிறான். சீமாவின் தங்கை சிம்பா அவன் வகுப்பில் படிக்கும் நல்ல மாணவி, அவள் இவன் கூட காட்டு கதைகள் சொல்லி அழுகிறாள். அவள் தந்தை அன்பு இல்லாததால் இவனிடம் அதை எதிர்பார்க்கிறார் போல. இவனுக்கு மென்மையான இப்புதிய உறவுகள் வந்தாலும், இவனால் இருக்க முடியவில்லை. தப்பித்து ஓடுகிறான். 

அப்போதுதான் தெரிந்து கொண்டேன், இக்கதையின்  நாயகன் அவன் அல்ல, சரவாக் மக்களே நாயகன். Saravak என்ன ஒரு அழகான இடம். கண் முன் நிற்கிறதே. இயற்கை மனம் வீசுகிறதே. என்ன ஒரு மாய வலை.

பெருநகரிலிருந்து மேடுக்காக வந்திறங்கி, துணிச்சலான அங்கு உள்ள கலாசாரத்தை பற்றி அறிந்து, ரசித்து ருசித்து வாழ வரவில்லை. கட்டாயத்தில் வந்தவன், இயற்கையுடனும், வீரத்துடனும், அன்போடும், உயிர்த்துடிப்போடும் வாழும் மக்களிடையே, மல்லாக்க திருப்பியே முதலை போல உணர்ந்து, வாய்ப்பு கிடைத்ததும் ஓடினான்.

இக்கதையில் சஸ்ரவக் மக்களின் சமூகத்தை நம் முன் நிறுத்தி காட்டிவிடார். நான் உலகின் ஏதோ ஒரு கோடியில் இருந்தாலும் ஒரு முறை சென்று வந்தது போல தோன்றுகிறது. 

Comments