Posts

Review of ம. நவீனின் "போயாக்" சிறுகதை

எங்கள் "Bay Area விஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்தில்" கடந்த மாதம் சிறப்பு விருந்தினராக மலேசிய அழுத்தாளர் திரு ம. நவீன் வந்திருந்தார். மிகவும் சிறப்பான உரையாடலிற்கு பின், நாம் அவருடைய இரு சிறுகதைகளை ஒன்றாக சேர்ந்து அலசினோம், ஆராய்ந்தோம் . முக்கியமாக, நவீன் அவர்கள், அந்த கதையை பற்றி பேச போவதில்லை என்று தெளிவாக இருந்தார். " போயாக் " கதையில் வரும் நாயகன் மலேசியாவில் பெரு நகரத்தில் படித்து, ஆங்கிலத்திலும் பொருளாதாரத்திலும் பின்தங்கியுள்ள " சரவாக்" (Saravak) மாநிலத்தில் தயக்கத்துடன், வெண்டாவிருப்பாக செல்கிறான். முதலைகள், மனிதர்கள், உடை, உணவு என  "சரவாக்"  வேறு உலகமாகவே உள்ளது. அங்கு நடக்கும் நிகழ்வுகள்,  விவரிப்பு என் கற்பனையில் உருவாகி வளர தொடங்கியது. இவன் அவர்களின் வாழ்வு முறையின் தெளிவை கண்டு நாயகன் வியக்கிறான். பல்லாயிரம் ஆண்டுகளாக மனிதரும் முதலைகளுக்கும் இடையே உள்ள எல்லையை நன்கு புரிந்து வைத்துள்ளார்கள், வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். இந்த எல்லையை மீறினால் உயிர்க்கு உத்தரவாதம் இல்லை. இதை பார்த்த நம் கதாநாயகன் நடுங்குகிறான். விட்டால் ஓடிவிடுவான் போல. இந்த...